கனமழை எதிரொலி : 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!

Heavy Rain in Tamilnadu

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழையானது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தற்போது தொடர் கனமழை காரணமாக மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோர் தொடர் மழை காரணமாக … Read more

பெரியார் சிலை விவகாரம்.! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.!

TN BJP Leader Annamalai - ADMK EX Minister Jayakumar

நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ சுற்றுப்பயணத்தின் போது பேசிய  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் கோவில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளரின் (பெரியார் சிலை) சிலை அகற்றப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசால் தற்போது செயல்பாட்டில் இருக்கும் இந்து அறநிலைத்துறை நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்துக்கு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். அதிமுகவை … Read more

வடமாநில திருவிழாவா தீபாவளி.? தமிழ் அறிஞர்கள் கூறும் வரலாற்று குறிப்புகள்…

Diwali 2023 History

வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை. தீபாவளி புறக்கணிப்பு : தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்.. 5 வாரங்களில் 2700 பேர் பதிவு.! 

TN Govt - Organ Donation

இறந்த பின்போ அல்லது மூளைச்சாவு அடைந்த பிறகோ ஒருவரது உடலில் செயல்பாட்டில் இருக்கும் உறுப்புகளை உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் ஒருவருக்கு தானமாக வழங்கும் உடல் உறுப்பு தான முறை தமிழகத்தில் பெருகி வருகிறது. இதனை வரவேற்கும் வகையில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உடல் உறுப்பு தானம் செய்தோரின் இறுதி சடங்கானது அரசு மரியாதையுடன் நடைபெறும் என் அறிவித்தார். தமிழ்நாட்டில் … Read more

இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர்… 4 பேரை கைது செய்த NIA அதிகாரிகள்.!

NIA raid in Tamilnadu and Puducherry

வங்கதேசத்தில் இருந்து இந்தியவுக்குள் சிலர் ஊடுருவியதாக எழுந்த புகாரின் பெயரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்து வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், முதற்கட்டமாக, சென்னை அருகே படப்பை பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த சபாபுதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திரிபுராவை சேர்ந்தவர் போன்று போலி அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார் என கூறப்படுகிறது. வயநாட்டில் நடந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்டுகள் கைது.. இருவர் தப்பியோட்டம்..! … Read more

95 மருத்துவமனைகள்.. 750 படுக்கைகள் தயார்.! தீபாவளி முன்னெச்சரிக்கைகள்.. அமைச்சர் பேட்டி.! 

Diwali Precaution in Tamilnadu says Minister Ma Subramanian

வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வர். இந்த பட்டாசு வெடிக்கும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஏற்கனவே, பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் சீன பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று அரசு முன்னெடுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more

பள்ளி, மருத்துவமனைகளில் மறைந்துள்ள ஹமாஸ் தளவாடங்களை தாக்கும் இஸ்ரேல் ராணுவம்.!

Israel Hamas War

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். வான்வெளி தாக்குதல் முதல் தரை வழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால், … Read more

5 தென் மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள ஆபாய எச்சரிக்கை.!

Vaigai Dam

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக தமிழக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக நீர்நிலை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தென் தமிழகத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாகவும், கேரளா, முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் தொடர்ந்து வைகை அணைக்கு திறந்து விடுவதன் காரணமாகவும் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை… வானிலை … Read more

10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Rain in Tamilnadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இடி மின்னலுடன் கனமழை தொடரும் எனவும், சென்னை உட்பட, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் … Read more

திமுகவை குறிவைத்து ஐடி சோதனை… அஞ்சமாட்டோம்.! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.!

Minister AV Velu says about IT Raid

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி எய்ப்பு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை தொடர்ந்தது. கடந்த 2ஆம் தேதி முதல்  தொடங்கிய சோதனை அவரது வீட்டில் நேற்று நிறைவுபெற்றது. சென்னை , திருவண்ணாமலை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றது. அமைச்சர் … Read more