தீபாவளி பண்டிகை – இவர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு. கடந்த சில நாட்களுக்கு முன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஸ்சில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு இவர்கள்தான் பொறுப்பு – போக்குவரத்து கழகம்

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு. பேருந்து படிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்துள்ளார் – ஈபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார் என ஈபிஎஸ் குற்றசாட்டு.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை…!

கடந்த 17-ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.  கடந்த 17-ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் போட்டியிடவில்லை என கூறிய நிலையில், தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த  நிலையில், இன்னும்  சற்று நேரத்தில் … Read more

#Breaking : கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டம்..! இபிஎஸ் உள்ளிட்ட எம்எல்.ஏ-க்கள் கைது..!

தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடததப்படும் என நேற்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், … Read more

ஆன்லைன் விளையாட்டு தடை – சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்கிறார் முதல்வர்..!

சட்டப்பேரவையில், இன்று ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை … Read more

இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள்..!

இன்று வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இது சட்டப்பேரவையில் அமளியாக மாறியது. பின்னர் சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் இபிஎஸ் மற்றும் அவரது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தனது எதிர்ப்பை கண்டனங்களாக தெரிவித்தார். இந்நிலையில் … Read more

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான் – டிடிவி தினகரன்

மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என டிடிவி தினகரன் பேச்சு.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் அவர்கள், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான். மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என தெரிவித்துள்ளார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களின் … Read more

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்கதிட்டமிட்ட படுகொலை அரங்கேறியது உறுதியாகியுள்ளது! – மநீம

நியாயமான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மநீம அறிக்கை.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மநீம, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த … Read more

திராவிட இயக்கத்தின் வெற்றியே இதுதான் ! – அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ்  ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதற்க்கு அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் மனோ தனகாரஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மொழி உரிமையை பாதுகாக்க தோன்றிய இயக்கம் திமுக! பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது. இந்தி … Read more