படித்த பெண்கள் லிவ் இன் உறவில் இருக்கக் கூடாது – மத்திய அமைச்சர் அதிரடி..!

டெல்லியில் பெண் கொலை விவகாரத்தில் நன்கு படித்த பெண்களுக்குத்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என மத்திய அமைச்சர் கருத்து.  மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் தன்னுடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே டெல்லியில்  மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஷ்ரத்தா தனது … Read more

இதுபோன்ற மரணங்கள் நெஞ்சை உறையச் செய்கிறது – ஜோதிமணி எம்.பி

கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார்.  கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த துயரநிகழ்வில் … Read more

கால்நடை மருத்துவர்களுக்கு அரசுப்பணி – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி.  டிஎன்பிஎஸ்சி அரசு பணி குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,  தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி அன்று நடைபெறும் என TNPSC  அறிவித்துள்ளது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்க மருந்து கொடுக்காமல் பெண்களுக்கு துடிக்க துடிக்க கருத்தடை அறுவை சிகிச்சை…!

பீகாரில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.  பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், வலியில் துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்ததாக அப்பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட … Read more

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்திப்பேன் – ஓ.பி.எஸ்

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் பேட்டி.  சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ஆதரவாளர்களைசந்தித்து பேசினார்.  அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்றும்  தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு … Read more

உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் – வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு அறிவுரை

உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி,  மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது.  பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளர்கிறது. நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்குகிறது. மண்ணில் பயிர்களுக்கு வறட்சி மற்றும் களர் உவர் தன்மைகளை தாங்கி வளரும் திறனை கொடுக்கிறது. தழைச்சத்து … Read more

நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை..!

ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது என ராதாகிருஷ்ணன் பேட்டி.  கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் அவர்கள், கோவையில்  நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது. பறிமுதல் செய்யப்படும் அடிப்படையில் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது – செல்லூர் ராஜு

மிழ்நாடு திராவிட பூமி; இங்கு திராவிட இயக்கம் மட்டும் தன் ஆட்சி அமைக்க முடியும் செல்லூர் ராஜு பேட்டி.  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக தலைமையில் தான் எப்போதும் கூட்டணி என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது; அதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு செல்லலாம்.  கூட்டணியை நம்பி வந்தால் எரிக் கொள்வோம். தமிழ்நாடு திராவிட பூமி; இங்கு திராவிட … Read more

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் – மோடி

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.  டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வர ஓய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.  மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

#Justnow : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்…!

‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயற்கைக்கோள்களை வடிவமைத்து, ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிறுத்தி வருகிறது. இந்த நிலையில்,ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட், 83 கிலோ எடையை தூக்கி செல்லும் திறன் கொண்டது. இந்த ராக்கெட் 545 கிலோ எடை, 6 மீட்டர் உயரம் … Read more