பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது! – ஜோதிமணி எம்.பி

பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வந்தநிலையில், அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாத காலத்திற்கு கட்சி பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் … Read more

இந்தோனேசியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்காத்தால் 300 மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 252 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் 20 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து, பலி … Read more

தந்தையின் நினைவிடத்தை தேடி மலேசியா சென்ற நபர்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்..!

அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது என முதல்வர் ட்விட்.  தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.அக்.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. … Read more

ஆன்லைன் ரம்மி விவகாரம் – ஆளுநரை சந்திக்கவுள்ளோம் : அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி.  அமைச்சர் ரகுபதி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி கோருவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இன்று அல்லாது நாளைக்குள் ஆளுநரை சிந்திப்போம். அப்போது ஆன்லைன் ரம்மி தடை … Read more

கரூரில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு – மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்..!

விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் தங்கமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை … Read more

பாஜகவினர் இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள கட்சியின் அனுமதி பெற வேண்டும் – அண்ணாமலை

யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் கட்சியின் அனுமதி பெற வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள்.  பாஜகவை சேர்ந்த சிலர் யூடியூப் சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது கட்சியின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க் கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைத்தளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் … Read more

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழகம் நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு … Read more

#JustNow : பாஜகவில் இருந்து முக்கிய பிரபலம் சஸ்பெண்ட் – அண்ணாமலை அதிரடி

காயத்ரி ரகுராமை ஆறு மாத காலத்திற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவு.  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை 6 மாதங்களுக்கு அவரது பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள … Read more

சிறையில் இருந்து வெளிவந்த பாஜக மாவட்ட தலைவருக்கு பசு மாட்டுடன் திரண்டு வந்து வரவேற்பு..!

சிறையில் இருந்து வெளி வந்த  நெல்லை மாவட்ட பாஜக தலைவருக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அரசு கட்டுப்பாட்டில் இருந்த மாடுகளை அத்துமீறி அவிழ்த்துவிட்ட புகாரில் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் சிறை சென்றார். இந்த நிலையில், இன்று அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளி வந்த  நெல்லை மாவட்ட பாஜக தலைவருக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை சிறை முன்பு திரண்ட பாஜகவினர் பசு மாட்டுடன் வந்து செண்டை மேளம், கரகாட்டம் என … Read more

தமிழகத்தில் முதல் முதலில் தொடங்கப்பட்ட மகளீர் கல்லூரி இதுதான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று என பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பட்டம் பெறுபவர்கள் கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதிலிருந்து அல்ல. பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணி மேரி கல்லூரி திகழ்கிறது. தமிழகத்திலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரி ராணி … Read more