கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  சென்னை மயிலாப்பூரில் நடந்த 43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இசைக்கும், நாட்டியத்துக்கும் தொண்டாற்றிய குடும்பமாக வழுவூரார் குடும்பம் திகழ்கிறது; கலைஞர்களை உருவாக்கும் பரந்த எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பெண் பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த நப.ர்.! 4 மாதம் பயணத்தடை!

ஏர் இந்தியா விமானத்தில் பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் விமானத்தில் பயணம் செய்ய மேலும், 4 மாதங்களுக்கு தடை கடந்த நவம்பர் மாதம் அஜய் மிஸ்ரா என்பவர், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் வயதான பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசித்த பிரதமர் மோடி..!

கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ட்ரம்ஸ் வாசித்த பிரதமர் மோடி.   பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று கர்நாடகா மாநிலம் சென்றார். கர்நாடகாவின் யாத்கிரி மாவட்டத்தில், நாராயண்பூர் இடதுகரை கால்வாயை பிரதமர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசித்தார். பிரதமர் மோடி மேளம் வாசித்ததை பார்த்த மக்கள் ஆரவாரம் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆணை…! ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகள் வைத்துள்ள உரிமையாளர்கள் அவற்றை ஒப்படைக்க உத்தரவு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு … Read more

தமிழர்களை சுரண்டி பார்த்தால் தீக்கங்கு வெளியாகும் – கனிமொழி எம்.பி

தமிழர்கள் சாதாரணமாக தான் இருப்பார்கள். ஆனால் சுரண்டி பார்த்தால் தான் தீக்கங்கு வெளியாகும் என கனிமொழி எம்.பி பேச்சு.  கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டு விழா மற்றும் புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலெய்டா மற்றும் பேத்தி பேராசிரியர் டாக்டர்  எஸ்டெஃபானி குவேரா ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆனது சென்னை பாரிஸ் கார்னர் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி அவர்கள், தமிழர்கள் சாதாரணமாக தான் … Read more

தமிழ்நாடு என்ற பெயர்தான் அனைவரையும் ஒன்றாக இணைத்த இலக்கு – சே குவாராவின் மகள்

தமிழ்நாடு என்ற பெயர்தான் அனைவரையும் ஒன்றாக இணைத்த இலக்கு அலெய்டா சே குவேரா பேச்சு.  கடந்த ஜனவரி 17ம் தேதி விமானம் மூலம் அலெய்டா சே குவேரா விமானம் மூலம், கேரளாவில் இருந்து சென்னை வந்தடைந்தார். தமிழகம் வந்த அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்னா மண்டபத்தில் நடைபெற்றது. … Read more

நகைசுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்…!

தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் காலமானார். தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவரது நகைச்சுவைக்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அடிமை தான். இந்த நிலையில், இவரது தாயார் வைத்தீஸ்வரி (87). இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் – திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி

சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் திரிபுராவில் 2023 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்றும், சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த  நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என திரிபுராவின் தலைமை … Read more

‘மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்’ – ராஜினாமாவை அறிவித்த நியூசிலாந்து பிரதமர்..!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு.  நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.  ஐந்தரை ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு அக்டொபரில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும்   தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த பதவி குறித்து நன்கு அறிவேன், இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார். … Read more

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே இந்த மருந்து வழங்க வேண்டும் – தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மருந்து மற்றும் மனநோய் மருந்து வழங்க வேண்டும் என  தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அறிவுறுத்தல். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் மருந்து கடையில் வலிநிவாரணி மருந்துகள் பெருமளவில் வாங்கி, உரிய விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்ட நிலையில், அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவரின் … Read more