‘யு’ சான்றிதழ் பெற்ற வாட்ச்மேன் திரைப்படம்….!

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.  நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் ‘யு'(U) சான்று பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். ‘2.O’ பட ஒளிப்பதிவாளர் நிராவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்பட ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

முருகதாஸ் படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்….!!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்காக பிரபல காமெடி நடிகரான யோகி பாபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது குறித்து யோகி பாபு அவர்கள் கூறுகையில், தற்போது ‘தளபதி 63’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.  

சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது…!

டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களான தோனி, சச்சின் மற்றும் மெரி கொம் போன்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டென்னிஸ் வீராங்கனையான சானியாவின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படவுள்ளது. இப்படம் ரூனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் சிம்பா, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய ரோஹித் செட்டி இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

நடிகை ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் தல அஜித்….!!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்கிறார். தல அஜித் சினிமாவை தாண்டி பல பொதுவான நிகழ்ச்சிகள் மற்றும் பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கலைஞர் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு, இது வரை எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நடிகர் அஜித் வரும் 24ம் தேதி மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொள்ள இருப்பதாக … Read more

அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படத்தின் ட்ரைலர்…!

அலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படத்தின் ட்ரைலர் திங்களன்று காலை வெளியாகிறது. இயக்குனர் நவீன் இயக்கி நடித்துள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இந்த படத்தில் கயல் ஆனந்தி ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் திங்களன்று காலை வெளியாகவுள்ளது. இந்த ட்ரெய்லர் 4k HDR குவாலிட்டியில் வெளியாக உள்ளது.

IT-ல் பணிபுரியும் நபராக அறிமுகமாகும் சசிகுமார்…!

இயக்குனர் கதிர்வேலு இயக்கம் படத்தில், நடிகர் சசிக்குமார் IT-ல் பணிபுரியும் நபராக அறிமுகமாகிறார். இயக்குனர் கதிர்வேலு, இயக்குனர் சுந்தர்.சி – யிடம் உதவியாளராக இருந்தவர். இவர் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் சசிகுமார் IT – ல் பணிபுரியும் நபராக அறிமுகமாகிறார்.

தளபதி விஜய்யை புகழ்ந்த பிரபல இயக்குனர்..!

பிரபல இயக்குனரான வெங்கடேஷ் தளபதி விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.  இயக்குநர் வெங்கடேஷ்  இயக்கத்தில் தளபதி  விஜய் ‘பகவதி’ படத்தில் நடித்துள்ளார். பகவதி படம் விஜயின் வெற்றி படமாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் வெங்கடேஷ் தளபதி விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ” நான் விஜய் சார் கூட 3 படம் பண்ணிருக்கேன். விஜய் சார் இயக்குநர்களுக்கு ப்ரண்ட்லியான ஹீரோவாகவும்  டெடிகேசனோடவும் இருப்பாரு” என புகழ்ந்து கூறியுள்ளார்.

மீண்டும் வர்மா படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா…?

இயக்குனர் பாலா வர்மா படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் துருவ் நடித்திருந்தார். இதனையடுத்து இந்த படம் சரியாக இல்லை என்பதால் இடையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வர்மா படத்தில் நடித்த துருவை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் மாற்றுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடடே…! இந்த கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா….?

நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான கிழங்குகளை பார்த்திருப்போம். பல வகையான கிழங்குகளை சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு கிழங்குகளும் பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல வகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. வாழை கிழங்கு வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு … Read more

கடவுளுக்கு பிறகு சினிமா தான் : ராம்

கடவுளுக்கு பிறகு சினிமா தான் என இயக்குனர் ராம் அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். கார்னிவெல் சினிமாஸ் திறப்பு விழாவில் பேசிய மிஸ்கின் அவர்கள் கூறுகையில், கடவுளுக்கு பிறகு நாம் அண்ணார்ந்து பார்ப்பது தியேட்டர் ஸ்கிரீன்களை தான். பெரிய திரையில் ரிலீசாகும் சினிமாவை தியேட்டர்களுக்கு வந்து பாருங்கள் திருட்டு விசிடியை திரும்பி பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ராம் அவர்கள் பேசுகையில், கடவுளுக்கு அடுத்ததாக சினிமா தான் எனக்கு முக்கியம் என்றும், எனது பேரன்பு படம் முதல் … Read more