நாய் போலவே தாக்குவேன்..சீண்டிய கமல்…சீறும் சிந்தியா..

 மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவியை  கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.இதனால் கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல்நாத் மீது … Read more

#ஆக்கிரமீப்பு காஷ்மீர்_கில்கிட்-பல்டிஸ்தானுக்கு பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து வழப்படும் என்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் கில்கிட் பகுதிக்குச் சென்றார். அங்கு கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு  தற்காலிகமாக பாகிஸ்தான் மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் கானின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா சார்பில், கடும் எதிர்ப்பு தெரிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த கேள்விக்கு பதிலளித்த … Read more

கலக்கத்தில் பயன்பாட்டாளர்கள்…. எரிவாயு உருளையின் விலை ₹.78 அதிகரிப்பு…

வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டு உருளைகளின் விலை ரூ.78 உயர்த்தப்பட்டது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு உருளை விலையை மாதந்தோறும் முதல் தேதி மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக மானிய விலை சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை நவம்பர் மாதத்துக்கும் … Read more

ஓய்ந்தது பீகார் பிரச்சாரம்… இறுதி கட்ட தேர்தல் நாளை தொடங்குகிறது…

பீகார் மாநிலத்தில்  நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி தற்போது முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே கடந்த 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்தல், நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி 4 … Read more

கார்த்திகை மாத மண்டலபூஜை…ஆன்லைன் முன்பதிவு இன்று துவக்கம்

சபரிமலை அய்யப்பனின் கார்த்திகை மாத மண்டலபூஜையை தரிசிக்க விருப்பும் பக்தர்களுக்கன ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை 1ந்தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து  விரதம் இருப்பது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று  முதல் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை அணிந்து சபரிமலை செல்பவர்கள், நவ14ந்தேதி வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் முன்பதிவு … Read more

ஆதரவற்ற ஆஸ்திரேலிய மக்களுக்கு உதவும் இந்திய வம்சாவளி குடும்பம்…. குவியும் பாராட்டுகள்…

உலகின் தீவு கண்டமான ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்னில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு இந்திய வம்சாவளி சமையல் கலைஞரான ஸ்ரீவஸ்தவ் தினமும் இலவசமாக உணவு வினியோகித்து வருகிறார். இவரின் இந்த உதவி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. தமான் ஸ்ரீவஸ்தவ் (54) என்பவர் வீடற்ற மற்றும் ஏழை மக்களுக்கு இலவச உணவை வழங்குவதற்காக ஆஸ்த்திரேலியாவில் அயராது உழைத்து வருகிறார், இதுகுறித்து ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குவது ஒன்றும் எனக்கு புதிதல்ல. ஏற்கனவே … Read more

கட்சிக்கு இழப்பு!திறம்பட பணியாற்றிவர்-மறைவு வேதனை தருகிறது..முதல்வர் உருக்கம்

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. … Read more

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்…

மறைந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர … Read more

2வது அலை வீச தொடங்கியதா?? முடங்கியது ஐரோப்பி நாடுகள்

கொரோனா பரவலின் 2வது அலை தற்போது  ஐரோப்பிய நாடுகளை தாக்கி வருகிறது.அதன்படி  பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொடூரமாக வீசி வரும் 2வது அலையால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இவ்வாறு இருக்க மேலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் 2வது முறையாக முழு ஊரடங்கை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன்படி தென் ஐரோப்பாவில் உள்ள போர்ச்சுகல் நாட்டில் கொரோனா … Read more

டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடி

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  உச்சத்தை தொட்டு வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் மட்டும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  20 பேருக்கு மேல் பயணம் பேருந்துகளில் செய்யக் கூடாது என்று டெல்லி அரசு அண்மையில் அறிவித்திருந்தது.இவ்வறிவிப்பினால்  பேருந்துகளை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் … Read more