பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து.. 20 மாணவர்கள் பரிதாபமாக பலி.!

Guyana

கயானாவில் உள்ள பள்ளிக்கு சொந்தமான தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மாணவர்கள் பலி மற்றும் பலர் காயமடைந்தனர். தென் அமெரிக்க நாடான கயானாவில், பள்ளி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹ்டியா நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், 14 மாணவர்கள் சம்பவ … Read more

தங்கம் விலை கடும் சரிவு…சவரனுக்கு ரூ.240க்கு விற்பனை.!

gold price

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30-க்கு குறைந்து ரூ.5,645-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,160-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.60க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

அதிர்ச்சி…! ஆர்.ஆர்.ஆர். பட நடிகர் மறைவுக்கு ராஜமௌலி உருக்கம்.!

RayStevensonRIP

ஆர்.ஆர்.ஆர். பட நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமௌலி இரங்கல் தெரிவித்துள்ளார்.  ராஜமௌலியின் RRR படத்தில் வில்லனாக கவர்னர் ஸ்காட் பக்ஸனாக நடித்த அயர்லாந்து நடிகர் ‘ரே ஸ்டீவன்சன்’ காலமானார். 58 வயதாகும் இவர் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் இறந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் ராஜமௌலி இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார். தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் ரே ஸ்டீவன்சனின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவர் … Read more

அனைத்து பள்ளிகளிலும் ‘தமிழ்’ பாடம் கட்டாயம் – தனியார் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு.!

cbsc

கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை இனி ‘தமிழ் பாடம் கட்டாயம்’ என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்: 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். … Read more

தொடரும் போராட்டம்.! Swiggy ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்…

swiggy employees

தமிழ்நாடு முழுவதும் ஸ்விக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஸ்விக்கி ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும். 1 கிலோ மீட்டருக்கு 10 வழங்க வேண்டும், பழைய ஊதிய முறையைத் தொடரவேண்டும். அதாவது, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்லாட்’ என்ற முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த ‘டர்ன் ஒவர்’ என்ற தொகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி … Read more

10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

tn exam result

10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 27ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், அந்த துணைத் தேர்வுக்கு இன்று நண்பகல் 12 மணி முதல் விண்ணப்பிக்கலாம். ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 10, 11-ம் வகுப்பு துணை நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மத்திய 1.15 மணி … Read more

கடும் எதிர்ப்பும், தடைக்கும் மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 200 கோடி வசூல்.!

The Kerala Story box office collection

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி ‘ திரைப்படம் வசூலில் பல கோடிகளை அள்ளி வருகிறது. சர்ச்சைகள் முதல் தடைகள் வரை அனைத்தையும் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கியுள்ள இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் இப்படம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. நேற்று வரை … Read more

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த மேலும் ஒரு தமிழர்.!

Rajasekhar

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சென்னை அடுத்த கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்த சாதனையை படைத்த 2வது தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மே 19 அன்று வரலாறு சாதனையை முடித்த ராஜசேகர், திங்கள்கிழமை சென்னை திரும்பினார். கோவளத்தைச் சேர்ந்த 27 வயதான இவர், முதலில் எரிய சிவகுமாருக்குப் பிறகு 8,848 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை ஏறிய தமிழ்நாட்டின் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 2022 அக்டோபரில் தனது … Read more

Today’s Live: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்..!

LIVE NEWS

முதல்வர்கள் சந்திப்பு: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்தனர். #WATCH | Delhi CM Arvind Kejriwal, Punjab CM Bhagwant Mann and other Aam Aadmi Party leaders meet West Bengal CM Mamata Banerjee in Kolkata. pic.twitter.com/s54kmu6id5 — ANI (@ANI) May … Read more

இன்று எனது நெருங்கிய நண்பரை இழந்திருக்கிறேன் – ரஜினிகாந்த் வேதனை.!

rajini - sarathbabu

நடிகர் சரத்பாபு மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.  பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு இவர் கடந்த நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், … Read more