#Breaking:அதிமுக பொதுக்குழு – இன்று உயர்மட்டக் குழு முக்கிய ஆலோசனை!

அதிமுக பொதுக்குழு வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான பணிகளில் ஈபிஎஸ் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மேலும்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே,பொதுக்குழுவுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி முன் ஓபிஎஸ் முறையீடு செய்தார்.அப்போது, பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில்,ஜூலை 11 ஆம் … Read more

தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கடந்த 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும்,மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்,விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி;கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர்;ஈரோடு மாவட்டம் – தாளவாடி;திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம்;திருநெல்வேலி மாவட்டம் – மானூர்;திருப்பூர் மாவட்டம் – தாராபுரம்;தருமபுரி மாவட்டம் – எரியூர்;புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி;திருவாரூர் மாவட்டம் – கூத்தா நல்லூர்;வேலூர் மாவட்டம்-சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் … Read more

#Breaking:சற்று முன்…இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரியவருக்கு ரூ.25,000 அபராதம் – நீதிமன்றம் போட்ட உத்தரவு!

அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு ஈபிஎஸ் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாகவும்,மேலும்,ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி … Read more

#Breaking:கருமுட்டை விற்பனை – குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர், கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை … Read more

#Breaking:நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல் – தமிழக அரசு!

நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னதாக அறிவுறுத்திய நிலையில்,நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில்,நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம்,ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் தமிழக … Read more

#Breaking:அதிர்ச்சி…மீண்டும் 18 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா;35 ஆக எகிறிய பலி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 18,930 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,159 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,930 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,34,59,239 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,15,212-லிருந்து 1,19,457 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35 … Read more

டும் டும் டும்…பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு இன்று டாக்டருடன் திருமணம்!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவரை இன்று திருமணம் செய்ய உள்ளார்.  டெல்லியை தொடர்ந்து கடந்த தேர்தலில் யாரும் எதிர்பாரா வண்ணம் பஞ்சாபில் முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சி சார்பாக பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் மான்.இவர் சினி உலகில் இருந்து அரசியலில் கால்தடம் பதித்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் 2015 இல் தனது முதல் மனைவியைப் பிரிந்தார்.அவருக்கு முதல் திருமணத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,தற்போது … Read more

#Flash:நியாயவிலை கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு – தமிழக அரசு உத்தரவு!

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவானது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான,நியாய விலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு … Read more

மாநிலங்களை ஆண்ட ‘இசைஞானி’ – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் கலை,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சட்டம், சமூக சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு மத்திய அரசானது மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி கவுரவித்து வருகிறது.அந்த வகையில்,மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா,பிடி உஷா,வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,மாநிலங்களவை நியமன எம்பியாக தேர்வாகியுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது … Read more

#RainAlert:இன்று இந்த மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல,நாளையும் நீலகிரி,கோயம்புத்தூர், தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று  … Read more