#Breaking:போலி தகவல்கள் – பாஜக நிர்வாகி சவுதா மணி கைது!

அரசு குறித்து போலி தகவல்களை பரப்பிய பாஜக நிர்வாகி சவுதா மணி கைது. நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தையும்,பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த வேளையில்,இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட் டர் பக்கத்தில் பதிவிட்டார்.இதனால்,அவர்மீது சென்னை … Read more

#BigBreaking:பரபரப்பு…மாளிகைக்குள் போராட்டக்காரர்கள்;தப்பியோடிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே?..!

போராட்டக்காரர்கள் குவிந்ததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடியுள்ளார் என்று தகவல். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தடைகளை மீறி … Read more

“I Don’t Care;இவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல,ஆன்மிக வியாதிகள்” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்த நிலையில்,1,71,169 பயனாளிகளுக்கு ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், 1,71,169 பயனாளிகளுக்கு ரூ. 693.03 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். … Read more

#Flash:பாமக நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்!

பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து. கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,பாமக நிறுவனர் … Read more

தி.மலையில் ரூ.693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருவண்ணாமலை சென்றுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டுள்ளார். அப்போது,விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில்,திருவண்ணாமலையில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்படி,திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பிலான 246 திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து,ரூ.70.27 … Read more

நாளை பக்ரீத்;தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு…முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுரை!

உலகம் முழுவதும் நாளை(ஜூலை 10) தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.மேலும்,கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: ‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு நபிகள் நாயகம் … Read more

#Breaking:அமர்நாத் மேகவெடிப்பு சம்பவம் – பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு;40 பேரை காணவில்லை!

அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கு செல்வதற்கான யாத்திரை கடந்த 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,நடப்பு வருடத்தில் அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கியது.இதன்காரணமாக,அமர்நாத் யாத்திரையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,அமர்நாத் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு காரணமாக நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது.இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அமர்நாத் குகைக்கு … Read more

முக்கிய பிரபலம் மறைவு…இன்று அரசு நிகழ்ச்சிகள் ரத்து;நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு!

ஜப்பானில் நாடாளுமன்ற மேலவைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஆளும்கட்சி,எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.அந்த வகையில்,நாரா நகரில் நேற்று லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியை சேர்ந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போது,அவரது பின்னால் இருந்த 41 வயது மதிக்கத்தக்க டெட்சுயா யமகாமி எனும் நபர் ஷின்சோ அபேவை தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டிவிட்டார். அதன் பிறகு,உடனடியாக ஷின்சோ அபேவுக்கு … Read more

மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக ‘புர்ஜ் கலிஃபாவில்’ லேசர் ஷோ!

உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும்,மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் (ஜூலை 5-ம் தேதி) சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள்,மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச … Read more

#Justnow:இலவசம்…வண்டல் மண் எடுக்க இந்த சான்றிதழ் தேவையில்லை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்து பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள ஏரிகளிலும்,குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து,விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் … Read more