முகக்கவசம் அணியாததற்காக சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல்..! சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கண்டனம்..!

சிங்கப்பூரில் முகக்கவசம் அணியாததால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் வன்மையாக கண்டித்துள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய்,ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை விஷ்ணுபாய் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது,ஒரு நபர் அருகில் வந்து விஷ்ணுபாய் தனது முகக்கவசத்தை அணியவில்லை என்று மார்பில் எட்டி உதைத்துள்ளார். இதுகுறித்து,விஷ்ணுபாயின் மகள் பர்வீன் கவுர் திங்களன்று செய்தியாளர்களிடம் … Read more

மலேசியாவில் ஜூன் 7 ஆம் தேதி வரை 30 நாட்கள் முழு ஊரடங்கு..!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் வருகின்ற மே 12 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரையுள்ள 30 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது கடந்த ஆண்டை விட தற்போது பல மடங்கு அதிகரித்து வருகின்றது.இதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்,மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 12 முதல் அடுத்த மாதமான … Read more

தெலுங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் மே 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது வேகமாகப் பரவி வரும் நிலையில்,தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து,தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில்,தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில்,கொரோனா வைரஸ் பரவல் … Read more

கொரோனாவால் “அன்னையர் தினத்தில்” பெற்றோரை பிரிந்த 6 மாத குழந்தை;பராமரிக்கும் டெல்லி காவல்துறை..!

டெல்லியில் தாய்,தந்தை இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  நிலையில், அவர்களின் 6 மாத குழந்தையை டெல்லி காவல்துறை மீட்டு பராமரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.அதைப்போன்று,டெல்லியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,டெல்லியின் மீரட்டில் உள்ள ஜி.டி.பி. நகரில் வசிக்கும் கணவன்,மனைவி ஆகிய இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு … Read more

“மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும்”- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்..!

மத்திய அரசானது ஆமை வேகத்தில் செயல்படாமல்,முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிரைக் காப்பற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா  தீவிரமாக பரவி வரும் நிலையில்,அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முதற்கட்டமாக,முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து,மே 1 ஆம் தேதியிலிருந்து 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,சில தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக … Read more

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: “விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும்”- பிசிசிஐ..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்,விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு செல்கிறது.இதனைத்தொடர்ந்து,இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய … Read more

ஜெருசேலம் ராக்கெட் குண்டு வீச்சில் 9 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி..!

ஜெருசலேமின் காசாவை இஸ்ரேல் தாக்கியதில் 9 குழந்தைகள் உட்பட 20 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். புனித ரமலான் மாதம் ஆரம்பமானதை முன்னிட்டு ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.இதனால்,இந்த கட்டுபாடுகளை எதிர்த்து முஸ்லீம் மற்றும் யூத அமைப்பினர் வெள்ளிக்கிழமையன்று ஆர்பாட்டங்கள் நடத்தினர். இதனையடுத்து,இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே கலவரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில்,திங்கள்கிழமையான நேற்று மீண்டும் பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு … Read more

“தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு”- அமைச்சர் சேகர் பாபு..!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளை இலவச உணவு கொடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்,கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளுக்கு தரமான உணவு 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் … Read more

வாட்ஸ்-அப்பின் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் முழுமையாகப் பயன்படுத்தத் முடியாது..!

வாட்ஸ்-அப்பின் புதிய பிரைவசி கொள்கையை ஏற்காவிட்டால் பயன்பாட்டின் சேவைகள் குறையும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் … Read more

“பள்ளிக்கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய இளம் சாதனையாளர் கெவின்..!

“கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,இளம் சாதனையாளர் கெவின் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.இந்தக் கடிதம் தபோது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா தொற்றின் காரணமாக கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதே ஆன இளம் உலக சாதனையாளர் கெவின் ராகுல் என்ற சிறுவன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி … Read more