#Breaking:நீட் தேர்வின் தாக்கம் குறித்து நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு ஆலோசனை…!

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.அந்த வகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன்படி,நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில்,சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில்,ஓய்வுபெற்ற நீதிபதி … Read more

#Breaking:புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் -பாஜக சார்பில் எம்.எல்.ஏ.செல்வம் போட்டி…!

புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் 16-ம் தேதி கூடுகிறது. புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட,பாஜக சார்பில் மணவெளி தொகுதி எம்.எல்.ஏ.செல்வம் இன்று வேட்புமனு தாக்கல். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு … Read more

தமிழகத்தில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை…!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது. 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளின்படி,பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் … Read more

38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் கொண்ட ‘உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்’ தலைவர் மரணம்…!

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும்,மிசோரத்தை சேர்ந்த ‘சியோனா சானா’, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலமானார். உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் மிசோரத்தை சேர்ந்த சியோனா சனாவுக்கு 38 மனைவிகளும் 89 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்,சியோனா சானா,நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மாநில தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.சியோனா சனாவுக்கு 76 வயது ஆகிறது. அவரது மறைவிற்கு … Read more

பெண்களை ஆபாசமாக பேசிய பிரபல யூ-டியூபர்; விசாரணைக்கு ஆஜராக – சைபர் கிரைம் போலீசார் உத்தரவு…!

யூ-டியூபில் ஆபாச பேச்சுக்களால் பெண்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் பிரபல யூ-டியூபர் மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர்கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார். இந்நிலையில்,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில்,சில பெண்களை ஆபாசமாகப் திட்டியதாகவும் குற்றம் … Read more

“பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாருங்கள்; டாஸ்மாக்கை மூடுங்கள்” -வானதி சீனிவாசன்..!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாருங்கள்,டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் நாளை காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில்,ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளின்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை  தவிர்த்து,27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி … Read more

#Breaking:காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பிற கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் தலைவருமான தலைவருமான இந்திரா ஹிருதயேஷ்(வயது 80),சனிக்கிழமையன்று டெல்லியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில்,திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று இந்திரா ஹிருதயேஷ் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி … Read more

கச்சத்தீவு பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இறக்கும் இலங்கை அரசு;தமிழக மீனவர்கள் கண்டனம்…!

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக,கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளில் கடலுக்குள் பழைய பேருந்துகளை இலங்கை அரசு இறக்கி வருகிறது. இதனால்,தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசு,மீன்கள் இனப்பெருக்கத்தைப் பெருக்குவதாகக் கூறி, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளிட்ட கடற்பகுதிகளுக்குள், பயன்படுத்த முடியாத பழைய பேருந்துகளை இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி,முதல் கட்டமாக ஜூன் 12ம் தேதி முதல் பழைய பேருந்துகள் கடலில் இறக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பணியை இலங்கை கடற்படையினர் … Read more

வேலைக்கேட்டு மனு;கொரோனா நிதிக்காக 2 பவுன் செயின் கொடுத்த இளம்பெண்- முதல்வர் பாராட்டு..!

மேட்டூரை சேர்ந்த செளமியா என்ற இளம்பெண்,தனக்கு வேலைக்கேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதிக்காக 2 பவுன் செயினையும்,முதல்வரிடம் கொடுத்துள்ளார்.  அதற்கு பாராட்டு தெரிவித்து,முதல்வர் ஸ்டாலின்,பொன்மகளுக்கு விரைவில் வேலை என ட்வீட் செய்துள்ளார். நேற்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார்.முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோரும் பங்கேற்றனா். … Read more

உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2 வது உயரமான சிவன் சிலை…!

கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற முருதேஸ்வரா கோவில் அருகே உள்ள சிவன் சிலையானது,உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2 வது உயரமான சிவன் சிலையாக உள்ளது. கர்நாடக மாநிலம்,உத்தரகன்னடா  மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் முருதேஸ்வரா கோவில் உள்ளது.இதன் சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலின் 3 பகுதிகளையும் அரபிக்கடல் சூழ்ந்துள்ளது. இந்த கோவிலானது சிவபெருமானுக்காக கட்டப்பட்டது.இதில், 20 அடுக்குகள் கொண்ட அதாவது,249 அடி உயர ராஜகோபுரம் உள்ளது.இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது. இந்த … Read more