ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டி:ஷிகார் தவான் விலகல்..!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை கவனித்துக் கொள்வதற்காக தனக்கு ஓய்வு அளிக்கும்படி துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிசிஐ) கேட்டுக் கொண்டிருந்தார்.  அதை ஏற்று, முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் தேர்வுக்குழு அணியில் புதிதாக சேர்க்கவில்லை.

இர்மா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மறுசீரமைப்பு குழு டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..!

இர்மா புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த துயரமான சூழ்நிலையில் இருந்து புளோரிடா மக்கள் மீண்டும் வர தேவையான அனைத்து உதவிகளும் 100 சதவீத செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.  புளோரிடாவில் நிவாரணப்பணிகளில் அமெரிக்கா ராணுவம் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. உணவு மற்றும் குடிநீர் படகுகளில் கொண்டுவரப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இர்மா புயலின் கோரத்தாண்டவத்திற்கு புளோரிடாவில் 81 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பையில் கனமழை:ரயில்சேவை பாதிப்பு!மக்கள் அவதி..!

மும்பையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை புறநகர் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் இறுதி நாள்!!!இரட்டை இலைக்கு கடைசி நாள்..!

இரட்டை இலை யாருக்கு என்பதை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நம் வயிற்றில் உண்டாகும் வாயுகளை தடுக்கம் எளிமையான வழிகள்..!

நம் உடலில் முக்கியமாக நமது வயிற்றில் கேஸ் என அழைக்கப்படும் வாய்வு சேரமால் இருப்பதற்கான வழிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உண்ணும் உணவில் உள்ள சில ஜீரணமாகாத வாய்வுதான் பெரும்பாலான ஆண்களுக்கு தொப்பையை உண்டாக்குகிறது. மேலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், வயிற்றில் வாய்வு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனால், நாம் முயன்றால் அதை சுலபமாக போக்க முடியும்… எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உண்டு வந்தாலே இந்த வாய்பு பிரச்சனை என்பது அறவே … Read more

விவசாயிகளை கேலி செய்த உத்தரப்பிரதேச அரசு ..!

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் வாங்கிய 19 பைசா மற்றும் 50 பைசா கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக அரசு தங்களை கேலி செய்வதாக உத்தரப்பிரதேச விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 19 பைசா மற்றும் 50 பைசா கடன் ரத்து என்று அரசு அனுப்பிய கடிதத்தை காட்டி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

முன்னணி இயக்குனருடன் கைகோர்த்த நயன்தாரா

நயன்தாரா தற்போதெல்லாம் சோலோ ஹீரோயினாக தான் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் அறம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இதை தொடர்ந்து இவர் கோகோ படத்திலும் நடித்து வருகின்றார், இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் அறிவழகன் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாம், அறிவழகன் ஈரம், வல்லினம், ஆறாவது சினம், குற்றம்-23 என தரமான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரிலும் கிங் கான் ஷாருக்கான் தான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகரான இவர் ஹிந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர். சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பு இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 28 மில்லியனை தொட்டுள்ளது. மற்றவர்களை பின்பற்றுபவர்கள் அமீதாப் பச்சன் – 29.3 மில்லியன் சல்மான் கான் – 25.6 மில்லியன் அமீர் கான் – 21.9 மில்லியன் தீபிகா படுகோன் – 20.3 மில்லியன் பிரியங்கா … Read more

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்;ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு ..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக  போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டக்காரர்களை  அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்த நிலையில் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒன்று நான் இருகனும் இல்லை அது இருக்கனும் : கமல் ஆவேசம்

நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதாக செய்தி வருவது இது முதல் முறையல்ல. அவர் தொடர்ந்து அரசியல் பிரச்சனைகள் பற்றி கருத்து தெரிவித்து வரும் நிலையில், விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்கவுள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். “நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவது உண்மைதான். விருப்பத்தினால் அல்ல கட்டாயத்தினால்தான் அந்த முடிவை நோக்கி தள்ளப்படுகிறேன்.” “ஒன்று, நான் இங்கு இருக்க வேண்டும். அல்லது, ஊழல் இங்கு இருக்க வேண்டும். இரண்டும் ஒரே இடத்தில் … Read more