#JustNow: அரசு கலை, அறிவியல் படிப்பு – வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர … Read more

மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப்போக்கோடு இருந்து வரும் திமுக அரசு..! – ஈபிஎஸ்

இந்திய வானிலை மையம் “ரெட் அலர்ட்” கொடுத்த பின்பும் மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்ததாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை.  கடல் சீற்றம்,கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்குமென இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்பும் இந்த திமுக அரசு மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவலை அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில … Read more

இது நடந்தால் டிக்கெட் விலை 30% குறையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால் டிக்கெட் விலை 30% குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு. ரூ.2,300 கோடி மதிப்பிலான ஐந்து வழி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொதுப் போக்குவரத்து அமைப்பில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநில போக்குவரத்து கழகங்கள், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு … Read more

டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் – கோ ஃபர்ஸ்ட் கார் இடையே சிறு விபத்து!!

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து இன்று ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் லோகோ ஒட்டப்பட்ட ஒரு கார், இண்டிகோ விமானத்தின் மூக்குப் பகுதிக்குக் கீழே வந்து நின்றது. விமானத்தின் மூக்கு சக்கரத்தில் மோதியதில் இருந்து கார் சிறிது நேரத்தில் தப்பியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கார் எப்படி அங்கு வந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், காரை ஓட்டியவர் தவறுதலாக அந்த இடத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அந்த வீடியோவில் … Read more

#BREAKING: அதிகரிக்கும் பாதிப்பு..டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு. இந்தியாவில் குரங்கு அம்மை நோய் சற்று வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்றாலும், தற்போது ஒரு சில மாநிலங்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை இன்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கு … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஹாங்காங் அணிக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த தாய்-மகன் ஜோடி..

சென்னையில் நடந்து வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 30 இந்திய செஸ் வீரர்கள் மட்டும் விளையாடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் இரண்டு வீரர்கள் ஹாங்காங் அணிக்காக  விளையாடுகின்றனர். ஹாங்காங்கிற்கான ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பெண் கே.சிகப்பி மற்றும் அவரது மகன் கே.தண்ணீர்மலை விளையாடி வருகின்றனர். சிகப்பியின் கணவர் பி.ஆர்.கண்ணப்பன் ஹாங்காங் செஸ் கூட்டமைப்பின் பொருளாளராக உள்ளார். மதுரையில் பிறந்த சிகப்பி, இளம் வயதிலேயே செஸ் கற்று, வயது பிரிவு போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் … Read more

என்ஜாய் என்ஜாமி சர்ச்சை: புறக்கணிக்கப்பட்டாரா அறிவு..? பாடகி ‘தீ’யின் விளக்கம்..!

கடந்த வருடம் வெளியாகிய “எஞ்சாயி எஞ்சாமி” பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகர் அறிவு, பாடகி தீ குரலில் வெளியாகியது. இந்த பாடலை அறிவு தான் எழுதியிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்த பாடலை பாடகி தீ, கிடாக்குழி மாரியம்மாள் பாடி அசத்தியிருந்தார்கள்.  ஆனால், அந்த நிகழ்வில் பாடகர் அறிவு பங்கேற்கவில்லை. இதுகுறித்து பலரும் அறிவு புறக்கணிப்படுகிறாரா..? எதற்கு அவர் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து, … Read more

ஐசிசி மகளிர் டி 20 ஐ தரவரிசை: மூன்றாவது இடத்தில் ஸ்மிருதி மந்தனா..

பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசிய இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சமீபத்திய ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து 24 ரன்கள் எடுத்தார், மேலும் நியூசிலாந்தின் சோஃபி டிவைனை முந்தி ஆஸ்திரேலியாவின் பெத் மூனியின் இரண்டு ரேட்டிங் புள்ளிகளுக்குள் … Read more

கேரளாவில் 5வது நபருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டுபிடிப்பு.!

கடந்த மாதம் 27ஆம் தேதி துபாயில் இருந்து வந்த 30வயது மதிக்கத்தக்க நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ள்ளது.   தற்போது இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று சிறியதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றைப்படையில் எட்டி பார்க்க ஆரம்பித்து உள்ளது. ஏற்கனவே, கேரளாவில் 4ஆகவும், இந்திய முழுக்க 6ஆகவும் இருந்த குரங்கு அம்மை தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, தற்போது ஒன்று கூடியுள்ளது. ஆம், கடந்த மாதம் 27ஆம் தேதி, துபாயில் இருந்து, கேரளா கோழிக்கூடு விமான நிலையம் வந்த 30 … Read more

இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இதிலும் கடைசி குஜராத்தான்..! – சு.வெங்கடேசன் எம்.பி

இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  2021-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளா என ஒரு நாளிதழில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் (61), இதிலும் கடைசி குஜராத்தான் (24). ஒரு மசோதா நிறைவேற குஜராத் எடுத்துக் கொள்ளும் … Read more