Election Breaking: விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி

தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் பல்வேறு கட்டங்களாக எண்ணப்பட்டது.அதில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளரை விட 29,790 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார் . அதிமுக 71,332 திமுக 41,542 வித்தியாசம் 29,790

Election Breaking: பரமக்குடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைத்து

கடந்த மாதம்  ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற  தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரமக்குடியில் 4 கட்ட வாக்கு எண்ணிக்கைகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.அப்போது இரண்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

Election Breaking: பெரம்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

தமிழகம் முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நல்ல போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பெரம்பூர்  வாக்கு எண்ணும் மையத்திற்கு வடசென்னை மக்களவை வாக்கு இயந்திரமும் வடசென்னை மையத்திற்கு பெரம்பூர் வாக்கு இயந்திரமும் தவறாக வந்ததால் வாக்கு எண்ணும்  மையத்தில் உள்ள முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. அங்குள்ள கட்சி முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும்  அலுவலர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. … Read more

Election Breaking: பெரம்பூரில் வாக்கு இயந்திரம் மாறி வந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நல்ல போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பெரம்பூர்  வாக்கு எண்ணும் மையத்திற்கு வடசென்னை மக்களவை வாக்கு இயந்திரமும் வடசென்னை மையத்திற்கு பெரம்பூர் வாக்கு இயந்திரமும் தவறாக வந்ததால் வாக்கு எண்ணும்  மையத்தில் உள்ள முகவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. அங்குள்ள கட்சி முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும்  அலுவலர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. … Read more

Election Breaking: திருப்போரூரில் வாக்குகள் என்னும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் 3 கட்ட  வாக்கு எணிக்கைகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 3 வது  கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்காலிகமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படூர்  எனும் ஊராட்சி ஒன்றியத்தில்  வாக்கு சரிபார்க்கும்  இயந்திரத்தில் திமுக வேட்பாளருக்கு 2 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று முகவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ELECTION BREAKING:சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 11தொகுதியிலும் ,அதிமுக 8 தொகுதியிலும் முன்னிலை

கடந்த மாதம்  ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற  தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை  தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில்  தஞ்சை , காஞ்சிபுரம் ,திருப்பூர் ,திருவாரூர்,ஆம்பூர், குடியாத்தம், ஓட்டப்பிடாரம்,பூவிருந்தவல்லி, அரவக்குறிச்சி, பெரியகுளம் ,பெரம்பூர் ஆகிய பத்து  சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இதனை  தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை … Read more

Election Breaking : அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் 3172 வாக்குகள் முன்னிலை

கடந்த மாதம்  ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது . இதனை  தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் மானாமதுரை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.நாகராஜன் 3172 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.