எங்களுக்கு திருப்பி கொடுங்க – ஸ்டாலின் அதிரடி

  கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற ஆவண செய்யும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ” கல்வி மட்டுமே யாராலும், எப்போதும் பறித்துக் கொள்ள முடியாத சொத்து என்றும்  தரமான கல்வியை வழங்குவது மாநில அரசின் கடமை, … Read more

தொடரும் மழை – நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடர்ந்து வரும் நிலையில், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழையும் , சில இடங்களில் மிதமான மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுவரை சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,கடலூர் விழுப்புரம், செங்கல்பட்டு, நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை,  திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் … Read more

ஆளுநர் பதவி விலகுவதே சரி – திருமாவளவன்

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலகுவதே சரி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய  இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #இராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உழன்ற ஆறு பேர் விடுதலை! ஆளுநரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக … Read more

ரெட் அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ?

கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது,இதன்  காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், … Read more

சன்னி லியோன் அப்படி , தர்ஷா குப்தா இப்படி – நடிகர் சதீஷ் விளக்கம்

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் ஆடை குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையானதால் நடிகர் சதீஷ் அதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, நடிகர் சதீஷ்,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‌‌ விழாவில் பேசிய நடிகர் … Read more

அப்டேட்‌ கேக்காதீங்க, தப்பாயிகிரும் – சிம்பு

அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் சிம்பு.    சிம்பு நடித்த சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.இப்படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு ,படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், பாடலாசிரியர் தாமரை ஆகியோரை குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்தார். மேலும்,இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றும் இயக்குனர்கள் தங்கள் கனவுகளை … Read more

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். … Read more

ராகிங் புகாரில் 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

புகழ் பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாரில் ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் ராணிப்பேட்டை கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர்கள் மிரட்டி தண்டால் எடுக்க செய்வது,தண்ணீரை பீச்சி அடிப்பது,அரை டவுசருடன் ஓட விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், ஏழு சீனியர் … Read more

ஒரே நாள் 95 கோடி களைக்கட்ட போகும் ஐபிஎல் ஏலம்

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 16 சீசன் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம்,கேரளம் மாநிலம் கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 95 கோடி ரூபாய் ஏலத்தொகையாக நிர்யணயிக்கபட்டுள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு விட 5 கோடி ரூபாய் அதிகம். கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான வீரர்களே ஏலத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டுக்கான ஏலம் … Read more

எடுத்துக்கோ – வேகப்பந்து வீச்சாளர்களுக்காக கோலி , ரோகித் தியாகம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரின் விமான பயணத்தில் தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு  கோலி, ரோஹித்,டிராவிட் ஆகியோர் விட்டுக்கொடுத்துள்ளனர். நாளை நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளும்,நாளை மறுநாள்  நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக அடிலெய்டு நகருக்கு செல்லும் விமான பயணத்தில் வேகவந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு தேவை  என்ற காரணத்திற்காக,  கால்களை நீட்டி அமரும் … Read more