இந்திய பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்!

இந்திய பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர்.

இந்தியா முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 74-வது சுதந்திர தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அவர்களின் சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டு உறவுகள், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இந்த நட்புறவு ஆழமானது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.