பெங்களூருவில் ஆஸ்திரேலிய தூதரகம் அமைக்கப்படும் – பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அறிவிப்பு

பெங்களூருவில் ஆஸ்திரேலிய தூதரகம் அமைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அறிவிப்பு. 

அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடந்த சமூக நிகழ்ச்சியில்,  கலந்துகொண்டார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோருக்கு உற்சாக வரவேற்புக்கு அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, நேற்று இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பெங்களூருவில் ஆஸ்திரேலிய தூதரகம் அமைக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அறிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில்கள் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.