29 C
Chennai
Wednesday, June 7, 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,900 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,900...

முதலிடத்தை பிடித்தது ஆஸ்திரேலியா; இந்திய அணிக்கு சரிவு.!

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், 2- வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 269 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு 270 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணியால் 248 ரன்கள் மட்டுமே அடிக்க, 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை வென்றது. ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த தொடரை வென்றதன்மூலம் ஆஸ்திரேலியா(113 புள்ளிகள்) தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 0.648 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியாவை (113 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா 113 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.