#BREAKING: ஆஸி., ஓபன் டென்னிஸ் ஒசாகா சாம்பியன்..!

இறுதிப்போட்டியில், ஜப்பானின் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகள் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஒரு அரையிறுதியில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இதைத்தொடர்ந்து, இறுதிப் போட்டியில் ஜெனிபர் பிராடி, நவோமி ஒசாகாவை இன்று எதிர்கொண்டனர்.

இன்றைய இறுதிப்போட்டியில், ஜப்பானின் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். முதல் செட்டில் ஒசாகா 3–1 என்ற முன்னிலை பெற பின் பிராடி ஸ்கோரை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தார். பிறகு 4-4 என்ற சமநிலைக்கு செல்ல ஒசாகா தொடர்ச்சியாக இரண்டு புள்ளிகள் பெற்று முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஒசாகா கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில், ஒசாகா மீண்டும் நன்றாக போட்டியை தொடங்கி 3-0 என முன்னிலை பெற்றார். இதன் பின்னர் ஸ்கோர் 5-2 ஐ எட்டியது. இறுதியில், ஒசாகா 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை  கைப்பற்றினார். இந்த போட்டி 77 நிமிடங்கள் நீடித்தது.

ஒசாகா 2-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் இவர் 2019 இல் கிராண்ட்ஸ்லாம் போட்டி பட்டத்தை வென்றிருந்தார். இது தவிர, 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை யுஎஸ் ஓபனையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan
Tags: Naomi Osaka

Recent Posts

அதீத ஹெட்போன் பயன்பாடு..! 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு !!

WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…

1 min ago

மீனாட்சி திருக்கல்யாணம் 2024.! தீர்க்க சுமங்கலி வரம் தரும் மீனாட்சியம்மன்.!

மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…

17 mins ago

தமிழ்நாட்டில் செங்கல்.. கர்நாடகாவில் சொம்பு.! பிரச்சார களேபரங்கள்…

Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…

54 mins ago

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…

1 hour ago

உடல் சூட்டை தணிக்க வீட்டிலேயே கம்மங்கூழ் செய்யலாமா?..

கம்மங்கூழ் -கம்மங்கூழை  வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே…

1 hour ago

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…

2 hours ago