#BREAKING: ஆஸி., ஓபன் டென்னிஸ் ஒசாகா சாம்பியன்..!

#BREAKING: ஆஸி., ஓபன் டென்னிஸ் ஒசாகா சாம்பியன்..!

இறுதிப்போட்டியில், ஜப்பானின் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகள் மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஒரு அரையிறுதியில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இதைத்தொடர்ந்து, இறுதிப் போட்டியில் ஜெனிபர் பிராடி, நவோமி ஒசாகாவை இன்று எதிர்கொண்டனர்.

இன்றைய இறுதிப்போட்டியில், ஜப்பானின் டென்னிஸ் வீராங்கனை ஒசாகா அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். முதல் செட்டில் ஒசாகா 3–1 என்ற முன்னிலை பெற பின் பிராடி ஸ்கோரை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தார். பிறகு 4-4 என்ற சமநிலைக்கு செல்ல ஒசாகா தொடர்ச்சியாக இரண்டு புள்ளிகள் பெற்று முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஒசாகா கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில், ஒசாகா மீண்டும் நன்றாக போட்டியை தொடங்கி 3-0 என முன்னிலை பெற்றார். இதன் பின்னர் ஸ்கோர் 5-2 ஐ எட்டியது. இறுதியில், ஒசாகா 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை  கைப்பற்றினார். இந்த போட்டி 77 நிமிடங்கள் நீடித்தது.

ஒசாகா 2-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் இவர் 2019 இல் கிராண்ட்ஸ்லாம் போட்டி பட்டத்தை வென்றிருந்தார். இது தவிர, 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை யுஎஸ் ஓபனையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube