அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!எதற்காக தெரியுமா?!

மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,சூகிக்கு “பிரிவு 505(பி) இன் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது” என்று இராணுவ ஆட்சிக்குழு செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன் கூறியுள்ளார்.

நவீன மியான்மரின் தேசத் தந்தை ஆங் சான் மற்றும் கின் கியின் இளைய மகளான ஆங் சான் சூகி,ஒரு எழுத்தாளர் மற்றும் 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், அவர் மியான்மரின் மாநில ஆலோசகராகவும் (பிரதமருக்கு சமமானவர்) மற்றும் 2016 முதல் 2021 வரை வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.