சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடி மாத தரிசனத்திற்கு தடை..!

சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தரிசனத்திற்கு தடை 

அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம் வடபழநி, அருள்மிகு வடபழதி ஆண்டவர் திருக்கோயில், கந்தக்கோட்டம், அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், சென்னை, சூளை , அருள்மிகு அங்காள பரமேஸ்வரரி திருக்கோயில், பாடி, அருள்மிரு படவேட்டம் திருக்கோயில் மற்றும் அருள்மிகு தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் உள்ளீட்ட பல்வேறு முருகன் மற்றும் அம்மன் திருக்கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தீமிதி திருவிழா, காவடி சுமந்தும், பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டு தரிசனம் செய்வார்கள்.

தற்போது கொரானா தொற்று பரவும் அச்சம் உள்ளதால் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 9 முடிய அரசு கூட்டங்களை தவிர்க்க அறிவுறித்தியுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி கால பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்று பரவலைதடுப்பதற்காக இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலைத்துறையின் சென்னை மண்டல இணை ஆணையர் சி.ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.

author avatar
murugan