மாணவர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் பள்ளிகளில் இந்த சான்றிதழை பெற்று கொள்ளலாம்..!

10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம். 

கடந்த 19-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில்,  91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 23,971 பேர் தேர்ச்சி பெறவில்லை.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு ஜூன் மாதத்தில் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.