திருப்பூர் மக்கள் கவனத்திற்கு! இந்த கடைகளில் போன் மூலம் ஆர்டர் செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமாகாமல், அதனை கட்டுப்படுத்துவதற்காக, நமது நாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு முழுவதும் 21  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதானால், மக்கள் கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு சில கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா வாயிரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போனில் ஆர்டர் கொடுத்துவிட்டு கடைக்காரர் உங்களுக்கான மளிகை பொருட்களை பேக்கிங் செய்த பின்னர் நேரில் சென்று பெற்று கொள்ளலாம்.’ என மளிகை கடைகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.