ஈரான் மீது தடைகளை நீட்டிக்க முயற்சி.. அமெரிக்காவிற்கு 13 நாடுகள் எதிர்ப்பு..!

ஈரான் கடந்த  2015-ம்  செய்யப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுதங்களை தயாரித்து சோதனைகளை செய்துள்ளது என கூறி இது மோசமான ஒப்பந்தம் என்று ஈரான் உடன் ஒபாமா செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

இதையடுத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுடன் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை உட்பட பல்வேறு சர்வதேச தடையை டிரம்ப் கொண்டு வந்தார். ஆனால், இந்த தடைக்கு  ரஷ்யா, சீனா எதிர்ப்பு தெரிவித்தது. ஈரானுக்கு எதிரான ஆயுத உற்பத்தி தடைகள் வரும் அக்டோபர் மாதம் முதல் நிறைவு பெறவுள்ளது.

இந்நிலையில்,  ஈரானுக்கு எதிராக  தடைகளை நீட்டிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மீண்டும் முயற்சி செய்து வருகிறது. ஈரானுக்கு அமெரிக்கா கொண்டு வரயுள்ள பொருளாதார தடை உட்பட பல்வேறு சர்வதேச தடை தீர்மானத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனிஉள்ளிட்ட 15 நாடுகளில் 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 ஈரான் மீதான தடையை நீட்டிக்க அமெரிக்கா செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஈரான் மீதான தடைக்கு அனுமதிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.