ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறைவு – ஆத்மிகா..!

ஆத்மிகா படங்களின் விளம்பரங்களில் பெரும்பாலும் ஹீரோயின்கள் புகைப்படம் இடம் பெறாதது குறித்து பேசியுள்ளளார்.

நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி, கோடியில் ஒருவர், கண்ணே நம்பாதே ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படங்களின் விளம்பரங்களில் பெரும்பாலும் ஹீரோயின்கள் புகைப்படம் இடம் பெறாதது குறித்து பேசியுள்ளளார்.

இதில் அவர் பேசியது “எல்லா படங்களிலும் இது பொருந்தாது சில  திரைப்படங்களில் கதையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கோடியில் ஒருவன் திரைப்படத்தின் போஸ்டரில் விஜய் ஆண்டனிக்கு நிகராக எனது பெயரையும் வெளியிட்டிருக்கிறார்கள். படங்களில் நடிக்க வாங்கும் சம்பளத்தை குறைக்கும் விஷயம் ஹோரோக்களுக்கு பொருந்தலாம். அவர்களுடன் ஒப்பிடும் போது ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறைவு, இன்றைய காலகட்டத்தில் கேரவன் போன்ற வசதிகள் தேவைப்படுகிறது என்னைப் பொருத்தவரையில் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.