இன்று வெளியாகிறது அதர்வாவின் “குருதி ஆட்டம்” டீசர்.!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் டீசர் இன்று 6 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார் .யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் அதர்வா அவர்களுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் ராதிகா சரத்குமார்,ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் குருதி ஆட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வெளியிட உள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.