மகளின் இறுதி சடங்கில், பார்ப்போரும் கண்கலங்கும்படி தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்!

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் அப்பு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில்

By leena | Published: Nov 07, 2019 11:06 AM

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் அப்பு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும், மெர்சி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் வெளியில் சுற்ற சென்றுள்ளனர். அப்போது, வண்டலூர் – மிஞ்சூர், 400 அடி சாலை அருகே ராட்சச கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரெனெ கால் தடுமாறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, மெர்சியின் தந்தை அவரது மகளின் இறுதி சடங்கில் அவருக்கு பிடித்தமான பாடல் ஒன்றினை அழுதபடியே பாடியுள்ளார். இவரது இந்த செயல் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc