உலகம் முழுவதும், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் நாள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு, 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகினறனர்.

இன்று பெரும்பாலான இடங்களில், குடும்ப வறுமையின் காரணாமாக, கல்வி கற்க வேண்டிய தனது குழந்தை பருவத்தில், குடும்ப சுமையை சுமந்து கொண்டு, பல தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகள், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

“குழந்தைகள் உங்களுக்காக பிறந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் உங்களுக்காகவே மட்டும் பிறந்தவர்கள் அல்ல.” என்பதை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நம்மால் இயன்ற வரை ஏழ்மையினாலும், வறுமையினால் தொழிற்சாலைகளில் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைகளை கண்டுபிடித்து, நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அவர்கள் கல்வி கண்களை திறக்க வழிவகுப்போம்.