நள்ளிரவு 12 மணிக்கு கஜா புயல் கரையை கடக்கத்தொடங்கும்…!வானிலை ஆய்வு மையம்

நாகையின் கிழக்கே 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாகையின் கிழக்கே 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.புயலின் கண் பகுதியானது அடுத்த 1 மணிநேரத்தில்  நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும் .அதாவது நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே நள்ளிரவு 12 மணிக்கு கஜா புயல் கரையை கடக்கத்தொடங்கும்.கரையை கடக்கும்போது மணிக்கு100 முதல்110 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும்.

கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டராக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

Leave a Comment