2019-ம் ஆண்டில் விண்வெளியில் வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்.!

சூரியனை ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம்.! 27-10-19

இதுவரை எடுக்கப்பட்டதிலேயே, சூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சோலார் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் புதன் கோளின் சுற்றுவட்ட பாதையினுள் நிறுத்திக்கொண்டு, அங்கிருந்து சூரியனின் பரப்பை ஆய்வு செய்ய தனது தொலை நோக்கியைத் திருப்பும். இதிலுள்ள பிற கருவிகள், சூரியனிலிருந்து வெளியேறும் துகள்கள் மற்றும் அவற்றின் காந்தபுலம் ஆகியவற்றை கவனிக்கும். இந்த விரிவான ஆய்வு சூரியனின் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த செயல்பாடு 11 ஆண்டு சுழற்சியில் பலரின் கவனத்தையும் ஈர்க்கும் இது ஒரு ஆய்வு மட்டுமல்ல, புவியில் வாழும் அனைவருக்கும் நேரடியான தொடர்பை ஏற்படுத்த கூடியதாகும். சூரியனில் இருந்து வெளியாகும் திடீர் ஆற்றல் சீற்றங்கள், செயற்கைக் கோள்களை சேதப்படுத்தும், விண்வெளி வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும், மின் தொடர்களை செயலிழக்க வைக்கும் வல்லமையுடையவை. இது 1.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள, இந்த ஆய்வில் பிரிட்டன் 220 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது. இது, அட்லஸ் ஏவுகணையுடன் இணைப்பதற்காக ஃபுளோரிடாவுக்கு அனுப்பப்படும். பிறகு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சூரியனை நோக்கி விண்ணில் ஏவப்படும். இந்த விண்கலன்களை இணைப்பதன் மூலம் நம்ப முடியாத அளவிலான விஞ்ஞான தகவல்களை நாம் பெற முடியும். அதற்கான முக்கிய வாய்ப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரும் என லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டிம் ஹார்பரி தெரிவித்தார்.

‘விண்வெளி அவன்’2-11-19

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்துவதற்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘விண்வெளி அவன்’ பிஸ்கட் சுடுவதற்கான சரக்குகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு இந்த விண்கலன் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. அதிகபட்ச வெப்பம், ஈர்ப்பு விசை இல்லாத நிலை ஆகிய சூழல்களில் பிஸ்கட் சுடும்போது, அதன் வடிவம், அமைப்பு ஆகியவை எப்படி இருக்கும் என்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆராயுள்ளனர். இது விண்வெளியில் முதல் முறையாக பிஸ்கட் சுடும் நிகழ்வு, என்று இந்த சோதனையை வருணிக்கிறார்கள்.

‘ஹில்டன் டபுள் ட்ரீ’ என்ற விடுதி நிறுவனம், இதற்கான மாவை தயாரித்து வழங்கியுள்ளது. மிகக்குறைந்த ஈர்ப்பு விசை நிலவும் சூழலில் செய்யப்படும் இந்த முக்கிய சோதனை, நீண்ட கால விண்வெளிப் பயணங்களை இனிமையானதாக மாற்றும் நோக்கத்தோடு செய்யப்படுகிறது என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

விண்வெளியில் ஆடை பற்றாக்குறையால் நிகழாமல்போன வரலாற்று சிறப்புமிக்க முயற்சி.!

விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லாததால், வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ரத்து செய்துவிட்டது. கிறிஸ்டினா கோச் மற்றும் ஏன் மெக்லைன் பெண் விண்வெளி வீராங்கனைகள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று மின்கலன்களை பொருத்த வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா இரண்டே இரண்டு மத்தியத்தர அளவிலான உடைகளையே வைத்துள்ளது அதில் ஒன்றுதான் விண்கலனைவிட்டு வெளியே செல்வதற்கு ஏதுவானது. மற்றொன்றை பெறுவதற்கு சில மணி நேரங்கள் பிடிக்கலாம். ஆனால் நாசா விண்வெளி வீரரை மாற்றுவது எளிதானது பாதுகாப்பானது என்று முடிவு செய்தது. ஹூஸ்டனின் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின் செய்தி தொடர்பாளர், விண்வெளி வீரர் விண்வெளியில் இருக்கும் அவர்களின் அளவில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

சந்திரயான்-2 விண்கலம் 22 ஜூலை 2019

ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

இந்தப் பயணத்தின் சிறப்பு.!

சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் ‘விக்ரம்’ பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு ‘பிரக்யான்’ உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த, இந்த செலுத்தும் வாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம்.

சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 7-ம் தேதி நடந்தது. ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன் தெரிவித்திருந்தார்.

லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது.!

சந்திரயானின் 2 திட்டத்தின் அதி முக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது .

திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால் பாறைகள், தண்ணீர், பனிக்கட்டிகள், சரிவுகள், மேடுகள் உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து கலன்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத பகுதியை கண்டறிந்தவுடன், நான்கு சக்கரங்களை கொண்ட விக்ரம் என்னும் லேண்டர் தரை இறங்கியிருக்கும்.

விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு.! 

இதையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது. பின்னர் விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை வெளியிட்டது. மதுரை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்கிறார்.

நாசா தங்கள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை செப்டம்பர் 17 ,அக்டோபர் 14, 15, நவம்பர் 01-ம் ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்டு வந்தது. நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதாக சுப்பிரமணியன் கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்ததை சுப்பிரமணியன் நாசாவுக்கு மெயில் அனுப்பினார். சுப்பிரமணியன் ஆய்வை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர்.

செவ்வாய் துளையிடல், தோல்வியடைந்த நிலவு தரையிறக்கம், சூப்பர் மூன்.! பிரவரி-2019பிப்ரவரி மாத துவக்கத்தில் செவ்வாய் நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டரின் எச்பி3 கிரகத்தில் அதன் உட்புற வெப்பநிலையை அறிய துளையிட துவங்கியது. 5மீட்டர் ஆழம் வரை துளையிட திட்டமிட்ட நிலையில், சில தொழில்நுட்ப சிக்கல்களால் 30செமீ க்கு மேல் செல்ல இயவில்லை. இதே மாதம், இஸ்ரேல் தனியார் விண்வெளி அமைப்பான ஸ்பேஸ்ஐஎல், தனது முதல் மூன் லேண்டரை ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கான் 9 மூலம் விண்ணில் ஏவியது.

வழக்கத்தை விட பூமிக்கு மிக நெருக்கமாக பயணித்த நிலவு வானில் சூப்பர் மூனாக காட்சியளித்தது.

முழு சூரிய கிரகணம்.! 26 டிசம்பர் 2019

டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16-ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.

அன்றைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்பட்டது. அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

 

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

500 அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!

Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு…

2 mins ago

இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.!

Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19)…

13 mins ago

ஓட்டு போட முடியாமல் போனது மனசு வேதனையா இருக்கு -சூரி!

Soori  : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…

48 mins ago

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.!

Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்  பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…

50 mins ago

மக்களவை தேர்தல்! 50 சதவீதத்தைக் கடந்தது வாக்குப்பதிவு… எந்த தொகுதியில் அதிகம்?

Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…

1 hour ago

உங்க வீட்டுக்கு பெயிண்டிங் பண்ண போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…

1 hour ago