ஹெல்மெட் அணியாமல் சென்ற உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் – சென்னை காவல்துறை அதிரடி

ஹெல்மெட் அணியாமல் சென்ற உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் – சென்னை காவல்துறை அதிரடி

உயர் நீதிமன்றம் உத்தரவு அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.மேலும் பைக் பின்னால் அமர்ந்து வருபரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல் துறை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவல் துறையும் ஹெல்மெட் அணியாமல் செய்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.இதை தொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தார். அதில் காவல்துறை அனைவரும் போக்குவரத்து விதியை கடைபிடிக்க வேண்டும் குறிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறி இருந்தார்.

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து மாம்பலம் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் மதன்குமார்பைக்கில்  ஹெல்மெட் அணியாமல்  சென்றதால் மதன் குமாரை இணை ஆணையர் மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்ய உத்தரவு விட்டார்.

” கெட் பி” எனப்படும் போக்குவரத்து காவல் துறை அறிமுகபடுத்திய செயலி மூலம் பொதுமக்கள் ஒருவர் உதவி ஆய்வாளர் மதன்குமார்பைக்கில்  ஹெல்மெட் அணியாமல் சென்றதை புகைப்படம் எடுத்து புகார் செய்து உள்ளார்.இதனை தொடர்ந்து மதன் குமாரை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube