தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல்….! தமிழக தேர்தல் ஆணையர் பேட்டி….!

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல்….! தமிழக தேர்தல் ஆணையர் பேட்டி….!

தமிழகம் சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி  பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்.6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு, மார்ச் 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதாகவும், மார்ச் 22-ம் தேதி வேட்புமனு திரும்ப பெறப்படுவதாகவும், மார்ச் 20-ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், ஏப்-6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே-2ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது என்றும், தமிழகத்தில் 6000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும்  கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube