சட்டமன்ற தேர்தல்: ஐ.டி.சி சோழா ஓட்டலில் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு ஆலோசனை.!

தமிழக சட்டசபை பதிவிக்கலாம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்துள்ளது.

துணை தேர்தல் கமி‌ஷனர்கள் சுதீப்ஜெயின், ஆசிஸ்குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் கமி‌ஷன் செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தேர்தல் ஆணையம் குழுவினர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு சென்றுள்ளது. அங்கு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது 2 கட்டமாக நடத்துவதா? என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது. தமிழக சட்டசபை பதிவிக்கலாம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

1 hour ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

9 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

11 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

13 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

14 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

14 hours ago