மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்திய கொலைகள் – மு.க.ஸ்டாலின்

மத்திய – மாநில அரசுகளே மாணவர்களை கொலை செய்திருக்கின்றன என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் உயிரைக் கூட சாக விடமாட்டோம் என்றார்கள் .கொரோனாவினால் 8 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள் லட்சம் பேருக்கு பாதிப்பு – அதிலும் பொய்க்கணக்கு. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா.? அரியலூர் அனிதா, பிரதீபா, மோனிஷா, ரிது ஸ்ரீ வைஷியா, கீர்த்தனா, சுபஸ்ரீ, விக்னேஷ் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் யார் இவர்கள் .? எப்படி இறந்தார்கள்.? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளது. இந்தக் கொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமியே முழுக் காரணம். நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று திமுக தானே குரல் எழுப்பியது. இரண்டு மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பினோமே என்னவாயிற்று அவை, உங்களால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை; சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுண்டா.?

இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறதா ? மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியைக் கூட பெற முடியாதவர்கள் அமர்ந்திருக்கறீர்கள்.  தலையாட்டி பொம்மையாக அடிமை ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.