ஜார்ஜ் பிளாயீடு கொலை: யாரும் எதிர்பாராத விதமாக போராட்டதில் திடீரென பங்கேற்ற பிரதமர்!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயீடு கொலை சம்பவத்துக்கு நீதி

By surya | Published: Jun 06, 2020 06:41 PM

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயீடு கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு கனடாவில் நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் கலந்துகொண்டது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, கடத்த சில நாட்களுக்கு முன், அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார்.

Brother of George Floyd: 'I just want justice' | News | Al Jazeera

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி, பல நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில், கனடா நாட்டில் ஒட்டாவா மாகாணத்தில் No justice, No peace என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது.

அதில், யாரும் எதிர்பாராத விதமாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போராட்டத்தில் கலந்து கொண்டார். கறுப்பு நிற மாஸ்க் அணிந்து தனது பாதுகாவலர்களுடன் கலந்துக்கொண்ட அவர், அங்கு போராடி வரும் மக்களுக்காக முழங்காலிட்டு தனது ஆதரவை தெரிவித்தார். இது, அங்கு போராடி வரும் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா, வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து  கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது. அதற்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், "போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும்" என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections
  • TAGS

unicc