2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தானில் நடைபெரும் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட சூழலில் மற்ற போட்டிகள் இலங்கையில் மட்டுமே நடைபெற உள்ளன.
கடந்த மாதம் 30ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது சூப்பர் 4 சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றில், இந்தியா பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தேர்வாகி விளையாடி வருகின்றன.
இதனை அடுத்து இன்று (ஞாயிற்றுகிழமை) கொழும்பு மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளதால், ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த போட்டி வழக்கம் போல இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
மேலும் இந்த போட்டி மழையால் தடை எதுவும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக, இன்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ‘ரிசர்வ் டே’ அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று ஆட்டம் தடைபட்டால் அடுத்த நாள் (நாளை) இதே போட்டி மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய இலங்கை கொழும்பு வானிலை நிலவரத்தின் படி, போட்டி நடைபெறும் பகுதியில் 90 சதவீதம் மழைபெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்திய அணி சார்பாக கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் (அல்லது) அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.
பாகிஸ்தான் அணி சார்பாக கேப்டன் பாபர் அசாம், துணை கேப்டன் ஷதாப் கான் , ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி அகா, இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.