ASIA CUP 2018:இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ..!கடும் கோபத்தில் பிசிசிஐ..!

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் உள்ளதால் பிசிசிஐ  கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.இந்தப் போட்டிகள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் ஆசிய உள்ள அணிகளான  இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் விளையாடுகின்றது.மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

 

மேலும் தகுதிச் சுற்றில் வெற்றிபெரும்  அணியும்  ஏ பிரிவில் இடம் பெரும்.அதேபோல் பி பிரிவில் தகுதி சுற்றில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளது.சிங்கப்பூர்,மலேசியா,ஐக்கிய அரபு எமிரேட், ஓமன், நேபாளம், ஹாங்காங் ஆகிய  அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் .

Image result for bcci asian cup

இந்த போட்டியில் 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.ஆனால் இதற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதியும் இந்திய அணிக்கு ஒரு  போட்டி உள்ளது.தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் உள்ளதால் பிசிசிஐ  கடும் அதிருப்தியை வெளிபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு நாட்கள் இடைவெளியுடனே இந்தியாவுடனான ஆட்டம் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment