75 டெஸ்ட் போட்டிகளில் 386 விக்கெட்களை கைப்பற்றிய சாதனை படைத்த அஸ்வின்.. ஆனால் இரண்டாம் இடம்!

முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி 386 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் முதல் போட்டியில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் இந்திய வீரர் அஸ்வின், கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி 386 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2 வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். (140 இன்னிங்சில் 386 விக்கெட்கள்) முதல் இடத்தில் முரளீதரன், 75 போட்டிகளில் 420 விக்கெட்டை எடுத்தார். மேலும் அஸ்வின், 28 ஆம் முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். மூன்றாம் இடத்தில் தென்னாபிரிக்கா வீரர் ஸ்டெய்ன் உள்ளார். அவர் 75 டெஸ்டில் 383 விக்கெட்களை கைப்பற்றினார்.