ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

இங்கிலாந்து அணி , ஆஸ்திரேலிய அணி இடையே  ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

Image result for England vs Australia

முதல் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து 3-ம் நாள் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து விக்கெட்டையும் இழந்து 374 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

Image result for England vs Australia

ஆஸ்திரேலிய அணி  90 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 34 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதை தொடர்ந்து  நான்காம் நாள் மீண்டும் தனது ஆட்டத்தை  ஆஸ்திரேலிய அணி 112 ஓவரில் 7 விக்கெட் இழந்து 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தங்களது இரண்டாம் இன்னிங்ஸை டிக்லர் செய்து கொண்டது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி 397 ரன்கள் இலக்குடன்  இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோரி பர்ன்ஸ் ,
ஜேசன் ராய் இருவரும் களமிறங்கினர்.

Image result for England vs Australia

ஆட்டம் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடி வந்த ரோரி பர்ன்ஸ் 11 ரன்னில் அவுட் ஆனார். பிறகு இறங்கிய ஜோ ரூட்  , ஜேசன் ராய் உடன் இணைந்து அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தினர்.

நிதானமாக விளையாடி வந்த ஜேசன் ராய் 28 ரன்னில் வெளியேறினர்.அடுத்த சிறிது நேரத்தில் ஜோ ரூட் 28 ரன்னில் வெளியேற பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இறுதியாக இங்கிலாந்து அணி 52.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது.

Image result for England vs Australia

ஆஸ்திரேலிய அணியில் நாதன் லியோன் 6 விக்கெட்டையும் , பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டையும் பறித்தனர்.முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உள்ளது. இரண்டாவது போட்டி  வருகின்ற 14 தேதி முதல் 18 தேதி வரை நடைபெற உள்ளது.

author avatar
murugan