ஆஸ்திரேலியா அணி அபாரம்! ஆஷஸ் தொடரை வென்றது…

ஆஸ்திரேலியா அணி அபாரம்! ஆஷஸ் தொடரை வென்றது…

93/4 என்று 5-ம் நாள் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆட்டதை ஆஸ்திரேலியா 180 ரன்களுக்கு முடித்து வைத்தது. கமின்ஸ் 4 விக்கெட்டுகள், லயன் 3 விக்கெட்டுகள் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 1 விக்கெட்.
ஆட்ட நாயகனாக பாட் கமின்ஸும், தொடர் நாயகனாக வீழ்த்த முடியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த டெஸ்ட்டுடன் இங்கிலாந்தின்  ஆஷஸ் தொடர் முடிவுக்கு வந்தது. 93/4 என்ற நிலையில் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளே தேவைப்பட்ட நிலையில் ஜோ ரூட் வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் இன்று இறங்க முடியாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை விரைவுபடுத்தியது.
ஆனால் மொயின் அலி இந்தத் தொடரில் தன் விக்கெட்டை 7வது முறையாக நேதன் லயனிடம் கொடுத்த பிறகு ரூட் உடம்பு முடியாமலேயே இறங்கினார். தனது 37-வது அரைசதத்தை எடுத்தார் ரூட். ஆனால் இடைவேளைக்குப் பிறகு அவர் இறங்க முடியவில்லை. இங்கிலாந்து 180 ரன்களுக்குச் சுருண்டது.
மொயின் அலி 13 ரன்களில் லயன் பந்தில் எல்.பி.ஆனார். 42 நாட் அவுட் என்ற நிலையில் உடல் நலம் சரியில்லாத நிலையில் ரூட் மீண்டும் பலத்த கரகோஷங்களுக்கு இடையே இறங்கினார், இவரும் பேர்ஸ்டோவும் இணைந்து ஆடினர். ஆனால் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரூட் இறங்க முடியவில்லை. 142 பந்துகளைச் சந்தித்த பேர்ஸ்டோ 38 ரன்களில் பாட் கமின்ஸிடம் எல்.பி.ஆனார். இதே ஓவரில் ஸ்டூவர்ட் பிராட், ஷார்ட் பிட்ச் பந்தை தடுத்தாட முயன்று டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார்.
இங்கிலாந்து புதிய பந்தை எடுக்க லெக் ஸ்பின்னர் மேசன் கிரேனை கமின்ஸ் பவுன்ஸ் அவுட் செய்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஹேசில்வுட்டின் ஷார்ட் பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ரூட் பேட் செய்ய வரவில்லை. எனவே  58 ரன்களுடன்  ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். இதனால்  இங்கிலாந்து அணி  தோல்வி அடைந்தது.
 
இதனால்  ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை 4-0 என்று கைப்பற்றியது ..
source: dinasuvadu.com
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *