வழக்கப்படி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும்…! தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு..!

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

மருத்துப்படிப்புக்கு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது என்றும், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது. இதனை மருத்துவ கல்வி அலுவலகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இது அமலுக்கு வராத நிலையில், வழக்கமான முறையிலேயே தேர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தேர்வுகள் முகமை இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வானது காகித  முறையில் தான் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜூன் இறுதி அல்லது ஜூலை மாத இறுதியில் நீட் தேர்வுகள்  நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.