34 C
Chennai
Sunday, August 1, 2021

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! பொங்கலுக்கு பின் ராகுல் காந்தி வர வாய்ப்பு

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.ஆகவே தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.எனவே தேசிய கட்சியான காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காமல் உள்ளது. இதனிடையே தான் பொங்கல் பண்டிகை முடிந்த பின் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாநிலங்களான கோவை மற்றும் திருப்பூருக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரு மாவட்டங்களிலும் தொழில்துறையினருடன் ராகுல்காந்தி பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news