‘இ-பதிவில்’ திருமணத்திற்கான அனுமதி நீக்கம்…!

தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,இன்று முதல் திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்யவும் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும்,வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவதற்கும் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்ற முதல் http:/eregister.tnega.org என்ற  இணையதளத்தில் பயண விவரங்களை கொடுத்து ‘இ-பதிவு’ செய்து கொள்ளலாம்.

இந்நிலையில்,’இ-பதிவு’ விண்ணப்பிக்கும் இணையதளத்தில் இருந்து இன்று திருமணத்திற்கான பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

மேலும்,இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,திருமணம் என்ற பிரிவை பலர் தவறாகப் பயன்படுத்தி வெளியே சுற்றுகின்றனர்.இதனால்,அதிக அளவில் மக்கள் வெளியே வருவதால் கொரோனா மேலும் பரவ வாய்ப்புள்ளது.எனவேதான்,திருமணம் என்ற பிரிவை ‘இ-பதிவு’ இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தது.

Recent Posts

யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…

9 mins ago

டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

59 mins ago

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

1 hour ago

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…

1 hour ago

மங்காத்தா படத்தில் விஜய் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?

Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது…

2 hours ago

டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை.!

Food Safety Department: திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை,…

2 hours ago