இன்று டிரைலர்.! ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை வெளியிட்ட ஆர்யாவின் ‘டெடி’ டீம்.!

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக மார்ச் 12-ம் தேதி வெளியாக உள்ளதாகவும்,டிரைலர் இன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், கருணாகரன்,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் .

டி.இமான் இசையமைத்துள்ள இந்த படமானது காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தினை நேரடியாக ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளதாக வெளியான தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.இந்த நிலையில் தற்போது டெடி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதாவது ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தினை மார்ச் 12-ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதனுடன் டெடி படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று கூறி அதற்கான புரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.