அருண் விஜய்க்காக களமிறங்கும் ஆர்யா & பா.ரஞ்சித்.?!

அருண் விஜய்க்காக களமிறங்கும் ஆர்யா & பா.ரஞ்சித்.?!

அருண் விஜயின் 33-வது படத்தின் முதல்பார்வை நாளை வெளியீடு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு தற்காலிகமாக AV33 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  9 -ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யாவும், இயக்குனர் பா ரஞ்சித்தும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீடவுள்ளார்கள்.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.  மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube