மாஞ்சாவேலு கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண்விஜய்.! சினம் படத்தின் அப்டேட்டை கூறிய ஹீரோ.!

மாஞ்சாவேலு கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண்விஜய்.! சினம் படத்தின் அப்டேட்டை கூறிய ஹீரோ.!

அருண்விஜய்யின் சினம் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அருண் விஜய்யின் 30வது படமான சினம் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளார். ஜி. என். ஆர். குமாரவேல் இயக்கும் இந்தப் படத்தில் பாலக் லால்வாணி அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைப்பெற்றது. பெரிய மீசையுடன் வெள்ளை வேட்டி சட்டையில் கெத்தான தோற்றத்தில் உள்ள அருண் விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Latest Posts

இன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!