நான் இன்னும் என்ன செய்ய முடியும் ? என்னைத் தூக்கிலிட வேண்டுமா? யூடியூபர் கதறல்…!

நான் இன்னும் என்ன செய்ய முடியும் ? என்னைத் தூக்கிலிட வேண்டுமா? யூடியூபர் கதறல்…!

அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகரில் யூடியூபர் பராஸ் சிங் என்பவர் பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங்கிற்கு எதிராக யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு மாநில மக்கள் மீது தவறான விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டியது மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததாகவும் யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து பஞ்சாப் போலீசார் பராஸ் சிங் மீது வழக்கு பதிவு செய்து செவ்வாய்க்கிழமை மாலை அவரை கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரை அருணாச்சல பிரதேச காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக லூதியானா போலீஸ் கமிஷனரிடம் பேசியதாக அமைச்சர் கீரன் ரிஜிஜு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் வழக்கு பதிவைத் தொடர்ந்து பராஸ் அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கியதுடன் மன்னிப்புக் கேட்டு ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.மேலும் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் வீடியோ கமெண்டில் அவர் “நான் இன்னும் என்ன செய்ய முடியும்? நான் இப்போது என்னைத் தூக்கிலிட வேண்டுமா?” என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார், அதனுடன் அவரது தாயும் பராஸ் சிறுவன் என்றும் அவரை மக்கள் அனைவரும் மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைக் கண்டித்து அருணாச்சல பிரதேச அமைச்சர்கள் ட்விட்டரில் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube