பிரபாஸின் பிரமாண்ட படத்தில் ஸ்டைலான தோற்றத்தில் வில்லன் அருண் விஜய்!

பாகுபலி படம் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்ற பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சாஹோ. இந்த படம் பிரமாண்டமான சேசிங் காட்சிகள், ஆக்சன் காட்சிகள் என மிரட்டலாக  தயாராகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தில் அருண் விஜய் முக்கிய விளங்களில் ஒருவராக நடிக்கிறார், இன்று அவர் கதாபாத்திர பெயரும், தோற்றமும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஸ்வான்க் எனும் பெயரில் செம ஸ்டைலாக அருண் விஜய் உள்ளார். இந்த தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வில்லன் கதாபாத்திரம் என்றாலே அருண் விஜய் ஸ்டைலான லுக்கிற்கு மாறிவிடுகிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.